மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிகளும்,!!!!!

Loading...

மலட்டுத்தன்மை என்பது ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும்.

இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போதும், அல்லது வளர்ந்து வரும் சிசுவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையையும் குறிக்கும்.

இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றை பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைத்து, குழந்தைப் பேற்றைப் பெறுவதற்கான நவீன சிகிச்சை முறைகள் கீழே விளக்கப்பெற்றுள்ளன. இச் சிகிச்சைகளில் தமக்கு உதவக்கூடிய சிகிச்சையை தகுதியான மருத்துவ நிபுணர் மூலம் பெற்று; மலடி, மலடன் என்று வைகத்தார் ஏசாது, ஒதுக்கி வையாது மழலைச் செல்வங்களைப் பெற்று தாய், தந்தை என்ற பெருமையினைப் பெற்று மகிழ்வோடு வாழலாம்.

மலட்டு தன்மையினை இருவகையாக வகுத்துள்ளனர்.

1. கருவே தரிக்காமல் இருப்பது அல்லது கரு முட்டை விருத்தி அடையாதிருப்பதை முதல் நிலை மலட்டுத் தன்மை எனவும்; (சில பெண்களில் முட்டைகள் அடங்கிய சூலகமே இல்லாது பிறக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பூப்பெய்தமாட்டார்கள். அவர்கள் பிறப்பிலேயே மலட்டுத் தன்மை உள்ளவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.)

2. கருத்தரித்த பின்னர் கருச்சிதைவு ஏற்படுவது இரண்டாம் நிலை மலட்டுத் தன்மை (அடிக்கடி கருச்சிதைவு) எனவும் அழைக்கப்பெறும். இதற்கு கர்ப்பப்பை சிசுவை வளர்க்கும் தன்மை குன்றி இருப்பதனாலும் கரு பெலவீனமுற்று இருப்பதனாலும் உருவாகின்றது. இப் பிரச்சனைகளை தகுந்த வைத்திய சிகிச்சைமூலம் தவித்துக் கொள்ளலாம்.

மகப்பேற்றினை பெற்றிட முக்கியமாக இருக்க வேண்டியவை:

பெண்களில் கருக்கட்டும் தன்மை என்பது கர்ப்பமாகி குழந்தை பெறக்கூடிய தன்மை என்பதாகும். பூப்படைந்த ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் காலம் வரை மட்டுமே மகப்பேற்றை பெற்றுக்கொள்ள முடியும். பெண்ணின் இனப்பெருக்கக்காலம் பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை அமைந்திருக்கும். ஆனால் செயற்கை முறையில் 50 – 60 வயதுகளைத் தாண்டியும் மகப்பேற்றைப் பெற்றோர் இருக்கின்றார்கள்.

ஒரு பெண்ணின் கர்பப்பைகளுடன் இணைந்து பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சூலகங்கள் அல்லது சினைப்பைகள் காணப்படுகின்றன. குழந்தையாக பிறக்கும்போதே ஒரு பெண் 400,000 முட்டைகளை உருவாக்கக்கூடிய சூல்களுடன் பிறக்கின்றாள். அவள் பூப்பெய்தியதுடன், மாதவிடாய் சக்கரங்கள் ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு சக்கரத்தின் போதும், ஒரு சூலகம் ஒரு முட்டையை வெளிவிடும். இம்முட்டை பலோப்பியா குளாய் வழியாக கருப்பப்பையை நோக்கி வரும்போது, பலோப்பியா குளாயில் ஆணின் விந்துடன் இணைந்து கருக்கட்டியபின் கர்ப்பப்பையை அடைந்து கருப்பையின் சுவர்களில் பதிந்து சிசுவாக வளர ஆரம்பிக்கின்றது. முட்டைகள் கருக்கட்டக்கூடியதாக விருத்தியடைந்து வெளியேறுவதும், அவை பலோப்பியா குளாயை சென்றடைவதும் ஹோமோன் சுரப்புகளின் தன்மையில் தங்கியுள்ளது.

ஆண்களில் கருக்கட்டும் தன்மை என்பது, ஒரு பெண்ணில் முதிர்ச்சியடைந்து வெளிவரும் கருவை சினைப்படுத்தக் கூடிய விந்தணுவைப் பெற்றிருத்தலாகும். இது ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் விதைகளளில் உற்பத்தியாகும் விந்திலும் அதன் சேமிப்பிலும் தங்கியுள்ளது. அத்துடன் விந்து வெளியேற்றமும், வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையும் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றன. பெண்களை போலன்றி, ஆண்களில் தொடர்ச்சியாக புதிய, புதிய விந்தணுக்கள் உருவாகலாம். (பெண்களில் பிறப்பின்போது உருவாகிய முட்டைகள் மாத்திரமே விருத்தியாகும்)

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணிகள்:

1. பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சி (என்டோமீற்றியோசிஸ்).

3. பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.

4. பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கின்றி தோன்றுதல்.

6. பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை ஆனின் விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.

7. பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.

8. பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல்.

2. ஆண்களில் மாற்றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை (சக்தி) இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).

5. தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல். அல்லது முழுவளர்ச்சியடைந்த முட்டை வெளிவரும் காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளும் சந்தற்பம் இல்லாதிருத்தல் என்பவாம். பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.

ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள்:

1. ஆணின் விந்தில் உயிர் அணுக்கள் இல்லா நிலை

2. உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை

3. ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து போகாத நிலை

4. விந்தனுவை பீச்சும் திறன் இல்லாமை

5. உயிரணுக்களை கொல்லக் கூடிய எதிர்மறைப் புரதங்கள் விந்திலே கலந்திருத்தல்.

6. உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் இருத்தல்

7. பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலுறாத தன்மை.

8. விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்

9. விரைப் பைக்குள் விரையானது திருகிக் கொண்டு இருத்தல் .

10. விரயில் காயம் ஏற்படுதல், வீக்கம், அடி படுதல் போன்றவற்றால் விரையில் ஏற்படும் பாதிப்பு .

11. விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு

12. முற்றிய காசநோய்

13. விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் பாதிப்படைவது, இதற்கு நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .

14. தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது, புகை மற்றவை )

விந்து பற்றிய சில தகவல்கள்

• ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்

• வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000

• வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்

• ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7

• புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்

• ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்

• ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.

• விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்

• பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)

பெண்ணின் முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்

1. முட்டை, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் 14 – 15 நாட்களில் (சூலகம்) கருப்பையிலிருந்து முதிர்ந்த கருவாக வெளியேற வேண்டும். சில பெண்களிற்கு இது நிகழ்வதில்லை .

2. வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது உறுஞ்சி எடுக்கும் தன்மைய இழந்திருக்கலாம்.

3. இணைக்குழாயில் அடைப்புகள் இருக்கலாம்

4. கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம் பெறாத தன்மையை உடையதாயிருத்தல்

5. சினைப்பட்ட கருவானது தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல்.

6. கர்பப்பை வாயில் தொற்று நோய், பிறநோய்களின் பாதிப்புகள் காணப்படுதல் என்பனவாம்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்னாப்பது ஆண்களில் காணப்பெறும் “X”, “Y” என்னும் குரோமோசோம்கள்:

உடலின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி வடிவில் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோம் ஜோடியிலும் உங்கள் தந்தையிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும், உங்கள் தாயிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும் உள்ளன. இதனாலே, நீங்கள் உங்கள் பெற்றோர்கள் இருவரையும் போல இருக்கலாம்.

கருத்தரித்தல் நிகழும் போது, தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களும் தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும் ஒன்று சேரும். 23 ஆம் ஜோடியை தவிர மற்ற அணைத்து குரோமோசோம் ஜோடிகளும் பார்பதற்கு அசலாக இருக்கும். செக்ஸ் குரோமோசோம்கள் என்று இந்த கடைசி ஜோடியை அழைப்பார்கள் ஏனென்றால், அவை ஒருவரின் பாலினத்தை நிரூபிப்பனர்.

ஆண்களிடமும் பெண்களிடமும் X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம் என்று இரண்டு செக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. பெண்களிடம் இரண்டு X குரோமோசோம்களின் பிரதிகள் இருக்கும். ஆண்களிடம் ஒரு X குரோமோசோமின் பிரதியும்,ஒரு Y குரோமோசோமின் பிரதியும் இருக்கும்.

ஒரு தாயிடமிருந்து அவளது X குரோமோசோம்களில் ஒன்று தனது குழந்தைக்கு செல்லும். தந்தையிடமிருந்து, X அல்லது Y குரோமோசோம் செல்லும்.தந்தையிடமிருந்து Y குரோமோசோம் குழந்தைக்குச் சென்றால், அது ஆண் குழந்தையாய் பிறக்கும். X குரோமோசோம் சென்றால், அது பெண் குழந்தையாய் பிறக்கும். இந்த சீரற்ற செயல்பாட்டில், குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது தந்தையின் X அல்லது Y குரோமோசோம்களே.

சினைமுட்டைப்பை(ovary – சூலகம்) மாற்று சிகிச்சை

சில வேளைகளில் குறைபாடுடைய குழந்தைகள் பிறந்து பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு இருப்பதனால் ஏற்படுவதாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. சில பெண்களின் சூலகங்களில் இருந்து வெளிவரும் முட்டைகளில் ஒரே ஒரு “X” குரோமோசோம் மட்டுமே இருப்பதனால் பிள்ளைகள் குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள, அறிவு குறைந்த, அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிள்ளைகள் பிறக்கும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான ஒரு “X” குரோமோசோம் மட்டுமே வெளிவிடும் சினைமுட்டை பை என அழைக்கப்பெறும் சூலகத்தை நீக்கி மாற்று உறுப்பு சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம். அதற்கு 35 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் பெற்ற தாய் ஒருவரின் சூலகங்களில் ஒரு சூலகம் பெற்றப்பெற்று சத்திர சிகிச்சை மூலம் மாற்றீடு செய்யப் பெறுகின்றது. இச் சிகிச்சை முறை இந்தியாவில் 2002 முதல் வெற்றிகரமாக செய்யப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு. ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன .

ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டையை (ova) அடைந்து கருக்கட்டப் பட வேண்டும். பெண்களிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுப்பகுதியிலே சூலகம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும் , இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவளின் பெண் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டையை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.

பெண்களிலே சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந்தையாகும்.

இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். அதாவது ஆண் உடலுறவின் போது வெளியிடும் திரவமானது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .

இந்த சுக்கிலப் பாயத்திலே விந்துகளோடு அவை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான பதார்த்தங்களும் நிரம்பி இருக்கும். ஆணின் குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப்படுகிறது.

சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை(sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை(motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு(morphology) என்பவையே முக்கியமாக சோதிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போதே அந்த ஆணால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.

(விந்துகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும். பெண் இனப்பெருக்கத்தொகுதியில் 24-72 மணி நேரம் உயிர் வாழும். யோனி கால்வாயினுள் இடப்பட்ட விந்து கருப்பையினுள் நுளைந்து கருவைத் தேடிச் செல்ல்லக்கூடியதாக இருத்தல் வேண்டும்).

அதாவது விந்துகளின் எண்ணிக்கை மட்டும் தேவையான அளவு இருந்தால் போதாது அவை உருவ ரீதியாக உகந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனையால் மலட்டுத் தன்மை ஏற்படுமா?

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ, மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள்:

முப்பத்தாறு நாட்கள் இடைவெளியில் மாதவிலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாதவிலக்காகி, குறைந்த உதிரப்போக்கும், அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது. இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு, முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்ரு இருக்கும். இத்தகைய பிரச்சனையால் முட்டை வெளியிடப்படாத குறைபாடுள்ளவர்கள் உணவு முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும் முட்டை வெளிப்படுவது தடைபடும். நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது. மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலையிருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும். முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

விந்து அணுப் பரிசோதனை:

தம்பதினர்க்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தால் ஆணின் விந்தைப் பரிசோதித்து கருத்தரிப்பதற்கு தகுதியான விந்தணு இருக்கின்றனவா என அறிகின்றனர். கருத்தரிப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கு காரணம் ஆணா அல்லது பெண்ணா என அறிய, முதலில் ஆணின் விந்தணுவை பரிசோதனை செய்கின்றனர்.

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதிக்கப்படுபவை:

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.

* விந்தணுக்களின் எண்ணிக்கை.

* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.

* இயல்பான உயிரணுக்கள்.

* பாக்டீரியா போன்றவை.

* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது குறைந்த பட்சம் -நாற்பது மில்லியன் அணுக்கலாவது இருக்கணும் .அதற்க்கு குறைந்தால் நல்லதில்லை. .நூற்று இருபது மில்லியன் அணுக்கள் இருந்தால் மிக நல்லது. இந்த இடைவேளைக்கு உள் இருப்பது சிறந்தது

விந்தணுவில் 70 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 80 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

(புதிய ஆராச்சிகளின்படி மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் D குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு வைட்டமின் D உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன

தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்!

இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் D யும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.)

காரணங்கள்

கருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை. தெரிந்த காரணங்களில் சில மரபியல்; கருப்பை; வளரூக்கி சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு போன்றனவாகும்.

முதல் மூன்று மாத காலம்

அனேகமான மருத்துவத்தில் தோன்றும் மூன்றில் இரு பங்கு தொடக்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று காலத்திலேயே நிகழ்கின்றது. முதல் 13 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவில் அரைவாசியானவற்றில் நிறப்புரி அல்லது

நிறமூர்த்தத்தில் ஏற்படும் அசாதாரணமே காரணமாக உள்ளது.

இது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) வளரூக்கியின் குறைபாடும் கருச்சிதைவுக்கு காரணமாகின்றது. இந்த வளரூக்கியானது மாதவிடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந்தப் பெண்களுக்கு புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்படும். ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்கப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.

மூன்று தொடக்கம் ஆறு மாத காலம்

இக்காலத்தில் நிகழும் 15% மான கருச்சிதைவு கருப்பையில் ஏற்படும் இயல்பற்ற மாற்றங்கள், கருப்பையில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள், கருப்பை வாய் செயல்திறனற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படும். இவை குறைப்பிரசவத்துக்கும் காரணமாய் அமைவதுண்டு.

ஒரு ஆய்வு இந்தக் காலத்தில் நிகழும் 19% கருச்சிதைவுக்கு தொப்புட்கொடியில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாவதாகக் கூறுகின்றது. நஞ்சுக்கொடியில் ஏற்படும் பிரச்சனைகளும் இக்காலத்தில் நிகழும் கருச்சிதைவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவான இடர் காரணிகள்

ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கரு இருக்கும் நிலையில் இவ்வகை கருச்சிதைவுக்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.

கருத்தரிப்பின் போது சில பெண்களில் நீரிழிவு நோய் ஏற்படுவதுண்டு. இது கருவளர்ச்சிக்கால நீரிழிவு நோயாகும். கருத்தரிப்பின்போது போதிய கவனமெடுத்தலால் இது கட்டுப்படுத்தப்படக் கூடிய ஒரு நிலையாக இருக்கும். அவ்வாறின்றி, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களிலும் கருச்சிதைவுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.

சூலகத்தில் பல நீர்க்கட்டிகள் இருக்கும் நிலையும் கருச்சிதைவிற்கான இடரை அதிகரிக்கும். இந்த நோய்க்குறியை உடைய பெண்களில் 30-50% மானோரில் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது. கருத்தரிப்புக் காலத்தில் Metformin மருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் கருச்சிதைவு குறைந்திருப்பதாக இரு ஆய்வுகள் கூறின. ஆனாலும் 2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு மீளாய்வு இதனை மறுத்ததுடன், வழக்கமான Metformin சிகிச்சை பெறுவதையும் பரிந்துரை செய்யவில்லை.

கருத்தரிப்பு காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (Pre-eclampsia) ஏற்படுவதும் ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. அதேபோல் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் (Pre-eclampsia) ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும்.

தீவிரமான தைராய்டு சுரப்புக் குறை இருப்பவர்களிலும் கருச்சிதைவு அதிகம் நிகழலாம். இநோயின் தாக்கம் குறைவாக உள்ளவர்களில் கருச்சிதைவுடன் தொடர்பு காட்டப்படவில்லை. மேலும் இக்குறிப்பிட்ட நோயால் தன்னுடல் எதிர்ப்புக் குறைபாடு போன்ற, நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் சில நிலைகள், கருச்சிதைவைக் கூட்டுகின்றன.

உருபெல்லா (Rubella) என்றழைக்கப்படும் தீ நுண்மம் ஒன்றினால் ஏற்படும் உருபெல்லா தட்டம்மை (Rubella measles) அல்லது ஜேர்மனி தட்டம்மை, கிளமிடியா நோய் போன்ற நோய்களாலும் கருச்சிதைவுக்கான இடர் அதிகரிக்கும்.

புகைபிடிக்கும் அல்லது புகைக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கும், புகைக்கும் பழக்கமுள்ள தகப்பனைக் கொண்ட கருவிலும் இவ்வகை கருச்சிதவு ஏற்படும் சந்தர்ப்பம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது. கொக்கெயின் பாவனையும் கருச்சிதைவுக்கு காரணமாகலாம்.

குழந்தை வெளியேற ஆயத்தமாகும் நிலையில் திறக்க வேண்டிய கருப்பை வாய்ப்பகுதி முதலிலேயே திறந்து கொள்ளல்.

உடல் அதிர்ச்சி, நச்சு பொருட்கள் நிறைந்த சூழலில் போதல், IUD] போன்ற கருத்தடை உபகரணத்தை கருக்கட்டல் நேரத்தில் கருப்பையினுள் கொண்டிருந்தமை போன்ற நிலமைகளும் கருச்சிதைவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.

Paroxetine, Venlafaxine போன்ற மன அழுத்தத்திற்கு எதிரான சில மருந்துகள் பாவனை போன்றனவும் கருச்சிதைவுக்குக் காரணமாகலாம்

கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருச்சிதைவுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. வயது அதிகரிக்கும்போது கருச்சிதைவுக்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும்.

பெற்றோரின் வயது அதிகரிக்கையில் கருச்சிதைவின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். 25-29 வயதுடைய ஆண்களைக் காட்டிலும், 25 வயதுக்குட்பட்ட ஆண்களில் கருச்சிதைவு நிகழ்வதற்கான தன்மை 40% ஆல் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே ஆய்வு 25-29 வயதினரைவிட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் கருச்சிதை நிகழ்வதற்கான வாய்ப்பு 60% ஆல் அதிகரிப்பதாகக் கூறுகின்றது. வேறொரு ஆய்வு, இவ்வாறான கருச்சிதைவுகள் வயது கூடிய ஆண்களில் நிகழ்வது பொதுவாக முதல் மூன்று மாதங்களிலாகும். இன்னுமொரு ஆய்வு பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% கருத்தரிப்பு கருச்சிதைவில் முடிவதாகக் கூறுகின்றது.

நன்றி :-http://panippulam.com

துளசி

34Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*