திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாறுகள்- பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம்

ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பறிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வெளிஓயா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில்,

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் அடங்கிய தொழில் பயிற்சி நிலையம் பெயர் மாற்றியமைக்கப்பட்டமை மலையக மக்களை அரசியல் நோக்கத்திற்காக ஏனைய சமூகங்களுக்கு மத்தியல் தலைகுனிய வைக்கும் செயலாகும்.

எனவே குறித்த செயலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆரதவாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

14Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*