கல்வி அமைச்சினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 10 வருட ஆசிரிய இடமாற்றத்தால் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 10 வருட ஆசிரிய இடமாற்றத்தில் உயர்தரம் கற்பிக்கும் கிட்டத்தட்ட 3000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக தரம் 6 தொடக்கம் 11 வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் 9000 பேருக்கு இடமாற்றம் நடைபெற உள்ளது அனைவரும் தெரிந்ததே.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

உயர்தர ஆசிரியர்களின் இடமாற்றங்கள் ஏற்பட்டு அதற்கான காலஎல்லை முடிவடைந்த நிலையில் இடமாற்றத்திற்குட்ட ஆசிரியர்கள் சிலரின் அடாவடித்தனத்தால் செய்யப்படும் மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் கவலைக்குரியதாகும். குறித்த சில பாடசாலைகளில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் யாரும் வேறு பாடசாலைக்கு செல்லவே இல்லை. இவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையில் சேவையாற்றியும் அப்பாடசாலையை விட்டுச்செல்ல மனமில்லாது அதே பாடசாலையில் சேவையாற்றும் எண்ணத்தில்        இடமாற்றத்தை தற்காலிகமாக ரத்துச்செய்தவர்கள் சேவை மனப்பாங்குடையவர்களா? அல்லது சுயநலவாதிகளா?

பார்க்கப்போனால் சில விடயங்களை பட்டியல் படுத்தலாம் என தோன்றுகிறது.

  • குறித்த பாடசாலையை நோக்கமாக கொண்டு நடாத்திய வெளிவகுப்புக்கள்.
  • குறித்த பாடசாலைகளில் பணம் அறவிட்டு நடாத்தப்படும் மேலதிகவகுப்புக்களின் வருமானம்.
  • தனக்கு வழங்கப்பட்டிருந்த பதவிகளையும் அந்தஸ்துகளையும் இழக்க மனமில்லாமல் வேறு பாடசாலையில் தனக்கு இப்பதவி கிடைக்குமா என்ற ஏக்கம் ஒரு பக்கம்
  • குறித்தபாடசாலையில் வகுப்பறை கற்பித்தலில் ஈடுபடாது தூங்கிக் கிடந்தவர்கள் வேறு பாடசாலைக்கு சென்றால் கசக்கி பிழிந்து விடுவார்களோ என்ற மனோநிலை.
  • பிரயாண தூரம் என்ற பம்மாத்து
  • நோய்நிலமை
  • உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்கள் க.பொ.த(சா.த) மாணவர்களுக்கும் கற்பிப்பதால் இடமாற்றமுடியாது மேன்முறையீடு செய்தல்.
  • குறித்த ஆசிரிய இடமாற்றத்திற்கமைய வேறு பாடசாலையில் இருந்து வரவேண்டிய பதிலீடாளருடன் ஓர் ஒப்பந்த அடிப்படையில் சூட்சுமமான முறையில் இடமாற்றத்தை தற்காலிகமாக ரத்துச்செய்து பின்னர் நிரந்தரமாக ரத்துச்செய்தல்.

இவ்வாறு பம்மாத்துக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்…

மாணவர்களதும் ,ஆசிரியர்களதும் கல்விப்பாதையில் புதியமாற்றம், புதியசூழல், புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும், இலங்கை ஆசிரியஇடமாற்றக்கொள்கையின் விதிப்படியே இம் இடமாற்றம் நடந்தும் இவ்வாறான ஆசிரியர்களின் செயற்படுகள் ஈனத்தனமானவை.  இவ் இடமாற்றங்கள் தொழிற்சங்கங்களின் ஆதரவோடு எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி நடைபெற வேண்டுமென கௌரவ கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியிருந்தார். ஆனால் சில பாடசாலைகளில் அதிபர், அரசியல்வாதிகள், கல்விஅதிகாரிகளின் தலையீடுகள் இடம்பெற்றுள்ளது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எது எப்படியோ எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டம் (9000 ஆசிரியர்கள்) தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள ஆசிரி இடமாற்றத்தில் இதே குளறுபடிகளைக் அதிகமாக காணமுடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த விடயத்தில் பாடசாலை அதிபர்களும் கல்வியமைச்சும் எவ்வித பாரபட்டசம் பாராது இடமாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது இடமாற்றலாகிச் சென்று கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட உயர்தர ஆசிரியர்களின் வேண்டுகோளாகும்.

 

 

நரசிம்மன்

6Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*