இலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன்

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

அண்மைக்காலமாக தென்னிலைங்கையில் அரசியலுக்கு அப்பால் அதிகம் பெற்றப்பட்ட விடயமாக நீதிபதி இளஞ்செழியின் தொடர்பானதாகும்.

அடிமட்ட சிங்கள மக்கள் தொடக்கம் அதியுச்ச மட்டமான அஸ்கிரிய வரை நீதிபதி இளஞ்செழியின் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது.

தமிழினத்தின் மீது மிலேச்சத்தனமாக நடந்து கொண்ட இராணுவத்தினருக்கு எதிராக தண்டனைகள் விதித்த போது, நீதிபதி இளஞ்செழியனை பயங்கரவாதியாக தென்னிலங்கை பெயர் சூட்டிக் கொண்டது.

நீதிபதியின் துணிவும் திறமையும் தென்னிலங்கைக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து என்றால் அது மிகையாகாது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாதியாக வர்ணிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன், நீதி அன்னையின் பிள்ளையாக தென்னிலங்கை சமூகம் புகழும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதியின் துணிவு அல்லது அவரின் ஆளுமையை கண்டு இவ்வாறான மாற்றம் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் வெளிப்படுத்திய மனிதாபிமானம் ஒட்டுமொத்த இலங்கையையும் கலங்க வைத்திருந்தது.

அண்மையில் யாழ்ப்பாணம் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதியின் உயிரை காப்பாற்ற அவரின் மெய்பாதுகாவலரான ஹேமசந்திர தன்னுயிரை தியாகம் செய்தார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹேமசந்திரவின் உயிரிழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத நீதிபதி இளஞ்செழியன் வெளிப்படுத்திய மனகுமுறல் ஒட்டுமொத்த தென்னிலங்கையையும் கலங்க செய்தது.

உயிரிழந்த மேஹசந்திரவின் வீட்டுக்கு சென்ற நீதிபதி, அவரின் மனைவியின் காலில் வீழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.

இலங்கை வரலாற்றில் உயிரிழந்த தனது மெய்பாதுகாவலர் ஒருவருக்கு கௌரவமான நீதிபதி ஒருவர் இவ்வளவு மரியாதை கொடுத்த முதற் சந்தர்பம் இதுவாகும்.

அரசியல்வாதிகளின் உயிரை காப்பாற்ற எத்தனையோ இராணுவத்தினர் தமது உயிரை துறந்தனர். இதன்போது எந்தவொரு அரசியல்வாதியும் இரங்கல் கூட வெளியிட்டது கிடையாது.

சிங்கள இனத்தை சேர்ந்த மெய்பாதுகாவலின் உயிரிழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் நீதிபதி ஒருவர் கண்ணீர் விட்டழும் காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களையும் கரைய வைத்தது.

மனைவியின் காலில் வீழ்ந்தது மட்டுமன்றி உயிரிழந்தவரின் இரு பிள்ளைகளையும் தத்து எடுத்ததுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான முழு உத்தரவாத்தையும் நீதிபதி வழங்கியிருந்தார்.

பயங்கரவாதி என்று உச்சரிக்க முடியாதளவுக்கு சிங்களவர்கள் மத்தியில் அவரின் மனிதாபிமானம் வேரூன்றியது.

நீதிபதியின் கடவுள் என்றும், இவ்வாறான ஒருவர் தென்னிலங்கையிலும் (சிங்களவர்கள் மத்தியில்) இருக்க வேண்டும் என பல பெரும்பான்மையினத்தவர்கள் வெளிப்படையாக தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருக்கிறனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரங்களை முடிவு செய்யும் அதியுச்ச பீடமான அஸ்கிரிவினால் நீதிபதி இளஞ்செழியன் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு மாற்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட புரட்சி என்று கூட சொல்லாம். கடும்போக்காளராக வர்ணிக்கப்பட்ட ஒருவரின் மனிதாபிமானம், இனவெறி பிடித்த சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான அஸ்கிரியவையும் ஆடங்காண வைத்துள்ளது.

சமகாலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வாத,பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. மறுசீரமைக்கப்பட்ட அரசியலமைப்பை கொண்டுவருவதில் முழு அழுத்தங்களையும் தடைகளையும் அஸ்கிரிய பீடமே ஏற்படுத்தி வருகின்றது.

அரசியல் யாப்பு திருத்தம் மூலம் தமிழர்களுக்கு எதுவித நன்மையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மஹாசங்கத்தினர் தீவிரமான உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் நீதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அஸ்கிரிய பீடம் அதிஉயர் கௌரவம் வழங்கியுள்ளது.

கண்டியில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க பேரவையின் 14வது மாநாட்டின் போது இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இதன்போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

அஸ்கிரிபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் நீதிபதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் சிறந்த சேவையாற்றி முன்மாதிரியாக திகழ்ந்த நீதிபதிகளுக்கு கௌரவம் அளிக்கப்படுதாக மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்த இத்தகைய நீதிபதிகளின் சேவை மிக அவசியம் என்று அஸ்கிரிய மஹாநாயக்கர் குறிப்பிட்டிருந்தார்.

இரு தமிழ் நீதிபதிகளுக்கு அஸ்கிரிய பீடித்தினால் வழங்கப்பட்ட கௌரவமானது, நீதிபதி இளஞ்செழியனின் அதீத விட்டுக்கொடுப்பும் மனிதாபிமான செயற்பாடுமே காரணமாகும்.

மிகவும் இறுக்கமான, தீவிர பௌத்த கொள்கை கொண்ட, தனிச்சிங்களத்தை ஆதரிக்கும் அஸ்கிரிய பீடத்தில் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவம் தமிழனத்தின் மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

221Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*