ஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்

வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் தான் குடியை விட்டுவிட்டதாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண விழிப்புணர்வு வாகன பேரணி இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தது.

இதன்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் விருந்துபசாரங்களில் கலந்து கொண்டால் மட்டும் மது அருந்துவதாகவும், ஆனால் ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழு முதல் எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவொரு போராட்டம். இந்த போராட்டத்தை முடிக்கும் வரை நாங்கள் சத்தியவான்களாக இருக்க வேண்டும் என்றும் போதை என்ற பிசாசுக்கு எதிராக நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தநிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா அரச அதிபர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், பொலீஸ் மற்றும் இராணுவத்தினர், உத்தியோத்தர்கள். உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*