அவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா?

பௌத்த தாய்மார் நான்காயிரம் பேருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்டீன் சாபி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சியங்கள் நாளை குருணாகல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், ரதன தேரர் இன்று குருணாகலிற்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பௌத்த தாய்மாரைக் கொண்டு மருத்துவர் சாபிக்கு எதிராக முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கும் மக்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிடவும் ரதன தேரர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

சாபீக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறிய ரதன தேரர், 90 வீதமான சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளைய தினம் வழக்கு விசாரணைகளில் ஏதேனும் தாக்கத்தை செலுத்தும் நோக்கிலேயே ரதன தேரர் இன்று குருணாகல் பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*