வங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு! தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்

குருணாகலில் சமூர்த்தி வங்கிக் கட்டடத்தில் வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுபந்தாவ பிரதேச செயலக காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி கட்டடத்திலேயே வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியளவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சேவை செய்யும் ஊழியர்கள் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட போது இந்த வெடி குண்டை கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

பின்னர் இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு வந்து பாதுகாப்பாக்க வெடி குண்டை அகற்றியுள்ளனர்.

இந்த வெடி குண்டு இராணுவத்திற்கு சொந்தமானதல்ல எனவும், SHG82 ரகத்தை சேர்ந்ததெனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வெடி குண்டை உடுபந்தாவ மைதானத்தில் பாதுகாப்பாக வெடிக்க வைத்ததாக வெடி குண்டு கண்கானிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*