100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS

பொதுபலசேனா அமைப்பு அதன் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நிதியுதவியைக் கோரியிருக்கிறது. உதவ விரும்புபவர்கள் பணத்தை வைப்புச்செய்ய வேண்டிய கணக்கிலக்கத்தையும் அவ்வமைப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுபலசேனா அமைப்பினால் இன்று -25- கிருலப்பனையில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் கூறப்பட்டது.

அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கென எங்கேனுமிருந்து நிதியைத் திரட்டிக்கொள்கிறார்கள். ஊடகப்பிரிவொன்றை முறையாகப் பேணுகிறார்கள். அவர்களுக்கு பிரத்யேக அலுவலகங்கள் காணப்படுகின்றன. எனினும் அவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

மாறாக எமது அமைப்பிற்கென்று இத்தகைய வசதிகள் எவையுமில்லை. எமக்கு எவ்வித வருமானமோ, இலாபமோ வருவதில்லை.எனினும் நாங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை எம்மாலான அனைத்து வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதியுதவியின் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே எமது செயற்பாடுகளில் நாட்டம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 100 ரூபாயேனும் எமது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

நிதியுதவி அளிக்க விரும்புபவர்கள் இலங்கை வங்கியின் திம்பிரிகஸ்யாய கிளையில் ‘பொதுபலசேனா ஜாலய” என்ற பெயரில் 73308824 என்ற நடைமுறைக்கணக்கு இலக்கத்திலும் 74948616 என்ற சேமிப்புக்கணக்கு இலக்கத்திலும் பணத்தை வைப்புச்செய்ய முடியும்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*