ஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு அதிகளவில் அரேபிய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும் அந்த பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய இடமல்ல எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியில் அரபு மொழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறித்து, குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லா, அரேபிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதால், காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அரபு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் குழுவின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.

கேள்வி – காத்தான்குடி பிரதேசத்திற்கு அதிகளவில் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்களா?.

பதில் – ஆரம்ப காலத்தில் அப்படி வந்திருக்கலாம். சில முறை வந்து சென்றுள்ளனர்.

கேள்வி – காத்தான்குடியில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றவா?

பதில் – இல்லை.

கேள்வி – அப்படியானால், சாதாரண வாடி வீடுகள் தங்குவார்களா?

பதில் – ஆம்.

கேள்வி – இதற்கு முன்னர் சாட்சியமளித்தவர்கள். அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், அரபு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டதாக கூறினார்.

பதில் – அரபு மொழியில் பெயர் பலகைகள், நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முன்னரே அந்த பிரதேசத்தில் இருந்தன. பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள். ஒரு சிலர் வந்துள்ளனர். பெருமளவில் வருவதில்லை.

கேள்வி – காத்தான்குடி அரேபியர்கள் சுற்றுலா பயணம் வரும் இடமல்ல?

பதில் – இல்லை. காத்தான்குடி கடல் கொந்தளிப்பானது, அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் அளவில் எதுவும் இல்லை. பல இடங்களில் அரபு, ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் இருக்கும். சிங்களத்தில் இருக்காது எனக் கூறியுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*