வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்????

முன்பெல்லாம் மாணவர்களிடம் நீவிர் ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம்.

அவ்வாறான கேள்விக்குக் கட்டுரை எழுதிய அந்த மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

நூற்று ஐம்பது சொற்களுக்குள் நாட்டை சொர்க்கலோகமாக மாற்றுவது போல கட்டுரை எழுதிய ஞாபகம்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படியான கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

இந்த உலகில் எந்த ஜனாதிபதியையும் எந் தப் பிரதமரையும் மிக உன்னதமானவர்களாக உதாரணப்படுத்த முடியாத நிலைமை வந்து விட்ட பின்பு, நான் ஜனாதிபதியானால்; பிரதம ரானால் என்று மாணவர்கள் எப்படிக் கட்டுரை எழுத முடியும்.

ஆகையால்தான் அப்படியயாரு கட்டுரை வினா தவிர்க்கப்பட்டதுபோலும்.

ஆபிரகாம் லிங்கன், ஜவர்கலால் நேரு, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களுக் குப் பஞ்சம் வந்துவிட்ட பின்பு ஜனாதிபதியாக, பிரதமராக மாணவர்கள் தங்களைப் பாவனை செய்வதை விரும்புவதில்லை என்ற காரணத்தாலும் அத்தகையதொரு கேள்விக்கு இசகு பிசகாக கட்டுரை எழுதப்பட்டு விட்டால் அது வேறு வில்லங்கமாகிவிடும் என்ற அடிப்படை யிலும் ஜனாதிபதி, பிரதமர் என்ற பாத்திரங்களா மாறி கட்டுரை வரைக என்ற வினா இப்போது கைவிடப்பட்டிருக்கலாம்.

ஆனாலும் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில், நான் ஒரு மாணவனாக இருந்தால் நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து விசாரணை நடத்துவதற் கெனப் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நீவிர் ஓர் உறுப்பினராக இருந்தால் …….. என்று கட்டுரை எழுது மாறு கேள்வி கேட்கப்படுவதை விரும்புவேன்.

அவ்வாறான கேள்வி கேட்கப்பட்டால், மாணவன் என்ற அடிப்படையில் என் கட்டுரை இவ்வாறாகவே இருக்கும்.

—————————————–

ஹிஸ்புல்லா: வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தாறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான்.

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்

ஹிஸ்புல்லா: (கற்பனை) (மெளனம்)

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): கிழக்கு மாகாணத்தில் பள்ளி வாசல்களில் வைத்திருந்த வாள்களைக் கொண்டு தமிழ்மக்களை வெட்டிச் சரித்திருப்பீர்கள். அதன் மூலம் இரத்தாறு ஓடியிருக்கும்.

ஹிஸ்புல்லா (கற்பனை) மெளனம்

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): தற்கொலைக் குண்டுதாரிகள் மூலாக தமிழர் பகுதிகளில் குண்டு களை வெடிக்க வைத்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்து இரத்த ஆறைஓட வைத்திருப்பீர்கள்.

ஹிஸ்புல்லா: (கற்பனை) மெளனம்

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்):வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும் என்று தான் கூறியது உண்மை என ஹிஸ்புல்லா ஏற்றுக்கொண்ட பின்பு கூட, அவரைக் கைது செய்ய வில்லை என்றால் என்ன காரணம்… நூற்றைம்பது சொல் முடிந்து விட்டதால் பதிலை நீங்களே கண்டறியுங்கள்.

– Valampuri

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*