ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கப்படுவதாக வேடுவர்கள் தலைவர் வன்னியலா எத்தோ தெரிவித்துள்ளார் .

72 ஆவது பிறந்தநாளையொட்டி தம்பானை வேடுவ கிராமத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

“ அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் சின்ன பிள்ளைகளை போன்று சண்டையிட்டுக் கொள்கின்றனர்.கலாசாரம் இயற்கை சூழல் என்பவற்றை பாதுகாக்கும் தலைவர்களே தேவை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கும் அழைப்புக்கள் வருகின்றன.

அதற்குரிய தகுதியும் திறமையும் என்னிடமுண்டு. ஆனாலும் அந்த சேற்றில் இறங்க நான் தயாரில்லை”என்றார் வன்னிலா எத்தோ.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*