ஆண் உறுப்பின் அளவிற்கும் பெண்கள் உடலுறவில் திருப்தியடைவதற்கும் தொடர்புள்ளதா?

உடலுறவு என்பது ஒரு உறவின் ஒரு பகுதி மட்டுமே..! ஆனால் உறவின் ஒவ்வொரு பகுதியிலும் தனது துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறார்கள். உடலுறவை பற்றிய சந்தேகங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கத்தான் செய்யும்.

சில விஷயங்களை தன் துணையிடம் கேட்கலாம். சில விஷயங்களை கேட்க முடியாது. பெரும்பாலோருக்கு இது போன்ற விஷயங்களை வார்த்தையால் சொல்ல தெரியாது.

இந்த சந்தேகம் இருக்கா?

ஆண் உறுப்பு பெரிதாக இருந்தால் அது பெண்ணை உடலுறவில் அதிகமாக மகிழ்ச்சியடைய செய்யுமா என்ற கேள்வி பொதுவாகவே அனைத்து ஆண்களது மனதிலும் இருக்கும். ஆனால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஒரு ஆணின் நடத்தையில் தான் உள்ளது.

உயரமான ஆண்கள்!

ஆணுறுப்பின் அளவு மட்டுமே ஒரு பெண்ணை உடலுறவில் மகிழ்ச்சியடைய செய்வதில்லை. ஆணின் செயல்பாடுகள் தான் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. பொதுவாக பெண்கள் உயரமான மற்றும் சரியான உடற்கட்டு உள்ள ஆண்களை தான் விரும்புகிறார்களாம்.

உடலுறவு விளையாட்டுகள்

பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை என்பது பெண்களின் கருத்து. உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஒரு பெண்ணை திருப்திபடுத்துவதில் மிக முக்கிய விஷயமாக அமைகின்றன.

இதை எல்லாம் செய்யலாம்!

உடலுறவுக்கு முன்னர் அன்பாக பேசுவது, சின்ன சின்ன தழுவல்கள், முத்தமிடுதல்கள் போன்றவற்றை பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களாம்!

பெரிய ஆணுறுப்பு!

இருப்பினும், அறிவியல் அடிப்படையில் பெரிய ஆணுறுப்பு கொண்டவர்களது மரபணு சிறிய ஆணுறுப்பு கொண்ட ஆண்களை விட அதிக அளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பெரிய ஆணுறுப்பு பெண்களை திருப்திபடுத்துவதில் முக்கிய பங்குவகிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

9Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*