சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எலலை நீடிப்பு

அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எலலை நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான இந்த கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் சட்டவிரோத வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் தகவல்களை வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பாகவும் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் அருகில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிக்கு அறிவிக்க முடியும்.
இதற்கான அறிவுறுத்தல்களும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*