வைரத்தை விழுங்கிய எலி – கட்டாயம் வாசியுங்கள் பிடித்தால் பகிருங்கள்

🐀எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த
ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும்
விலை உயர்ந்த வைரம் அது..

வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து,
எப்படியாவது அந்த 🐀எலியை ஷூட்🔫
செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை
எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக்
கொண்டான்..

🐀எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன்🔫
வந்துவிட்டான், எலியை🐀 ஷூட் செய்ய..

எலி🐀 அங்கே இங்கேயென்று போக்குக்
காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள்🐁🐀🐀🐁 ஒன்று கூடிவிட்டன..

அந்த நூற்றுக்கணக்கான 🐁🐁🐁🐁🐀🐀🐀 எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த🐁 எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out..

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை
எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு
கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான்.

“ஆமா…! அந்த எலி🐀 மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே
இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம்
கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..

“இப்படித்தான்.. பலபேர் திடீர்ப்
பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட
நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு
மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே..
ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.

உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில்
வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி
இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை
செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*