குளியாப்பிட்டிய பகுதியில் அசாதாரண சூழ்நிலை..! காலைவரை ஊரடங்குச் சட்டம் போடப்பட்டது

குளியாப்பிட்டிய – கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது தாக்குதல் நடதத்தினர் எனும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இன்று குளியாப்பிட்டிய – கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது சில இனந் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியிருந்தது.

தாக்குதலையடுத்து, பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடிப்படையினரும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் சிலரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்படுத்த படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலதிக பொலிஸார் பல இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையினையடுத்து, குளியாபிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலை 6 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*