ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளிவாயல் போதும் !! அமைச்சர் ஹலீம் அதிரடி

நாட்டில் சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாக பள்ளிவாயல்கள் உள்ளன எனவும் ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளிவாயல் போதும் எனவும் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

ஹிரு தொலைக்காட்சியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் நாட்டில் சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாக பள்ளிவாயல்களின் உள்ளன இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? என அவரிடம் ஊடகவியளாலர் வினவியமைக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பள்ளிவாயல்களில் மயாணம் சுத்தம் செய்ய வாள் கள் வைத்திருக்கலாம் என அவர் கூறிய கருத்தை தான் தவறுதலாக கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் 2500 பள்ளிவாயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 500 பள்ளிவாயல்கள் பதிவு செய்யாமல் இருப்பதாகவும் கூறிய அவர் , பதிவு செய்யாமல் இயங்கிய பள்ளிவாயல்களுக்கு கடந்த கால நிலமையில் சிக்கல் இருக்கவில்லை எனவும் ஆனால் எதிர்காலத்தில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யாமல் பள்ளிவாயல்கள் இயங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*