எமது தலைவர் ரிஸாட் ஐ கவ்வக் கொடுக்க பாக்கிறாய்ங்க..-அமீர் அலி வீடியோஇணைப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரலை ஒடுக்கவே பேரினவாதிகள் முயற்சித்து வருவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான அமீர் அலி குற்றம் சுமத்தினார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

மேலும், இந்த காரணத்திற்காகவே நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளின்போதும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குற்றமிழைத்தவர்களே கைது செய்யப்பட வேண்டியவர்களென்றும் ஆனால், குற்றமிழைக்காத அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சில ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் கூறுவது தவறான விடயமென குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து பிரச்சினை, காணி பிரச்சினை, மின்சார தடை, குண்டுவெடிப்பு என நாட்டில் என்ன நடந்தாலும் அந்த விடயத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புபடுத்தி அவரை கைது செய்ய வேண்டுமென கூறுவது தவறென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*