மாற்று மதத்தவர்களிடம் வெட்கித் தலைகுனியும் இலங்கை சோனக சமூகம் இனி செய்ய வேண்டியது என்ன?

உயிர்த்த ஞாயிறன்று எமது சக அப்பாவி கிரிஸ்தவ மதத்தவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களால் இன்றுவரையில் 400க்கும் மேற்பட்ட பச்சிலம் பாலகர்கள் உட்பட பல புத்திஜீவிகளை இழந்தவர்களாக கிரிஸ்தவர்கள் நிர்கக்தியாககப்பட்டிருக்கின்றனர்.

இவற்றைச் செய்தவர்கள் தௌஹீத் ஜமா அத்தினர் என்ற அடிப்படைவாத முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பலரால் பேசப்படுவதுடன் அதனை பாதுகாப்புத் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்களது காட்டுமிராண்டித்தனமான தற்கொலைத்தாக்குதல்களை ஒருபோது உண்மையான சோனகர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டர்கள்.

ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வாறு ஒருவர் யுத்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பிரதானமானவை அந்நிய மத்தத்தவர்களின் மதஸ்த்தலங்களை மதித்து நடக்கவேண்டும், கர்ப்பினித்தாய்மார்களை எதுவும் செய்யக் கூடாது, சிறார்களை கொல்லக்கூடாது, வயோதிபர்களை கொல்லக்கூடாது மற்றும் பயன் தரும் மரங்களை வெட்டக்கூடாது என்று போதித்த மார்க்கத்தை பிழையாக விளங்கிக் கொண்டு இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பினரான தௌஹீத் ஜமாஅத்தினர் எதற்கெடுத்தாலும் மூர்க்க குணத்துடன் மற்றவர்களை ஏசுவதிலும் பேசுவதிலும் சண்டையிடுவதிலுமே காலத்தைக் கழித்த வரலாறுகளதான் இலங்கையில் பதிவாகியுள்ளமையை அவர்கள் வாழும் பொலிஸ நிலையங்களை விசாரித்தால் தெரியும்.

எனவே இவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.இவர்களை இஸ்லாமியர்களாக பார்க்கவேண்டாம்.

தௌஹீத் ஜமாத்தினரிடம் ஒழுக்கம், மனித விழுமியம், மற்றும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ஜனநாயம் என்பன ஒரு கடுகளவும் அவதானிக்க முடியாது இதனை அனைத்து முஸ்லீம்களும் ஏற்றுக் கொள்வர்கள் என்று நம்புகின்றேன்.

ஏனெனில், இந்த தௌஹீத் ஜமாத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எடுத்து நோக்கும்போது இவர்ககளிடம் ஒரு முஸ்லீமிடம் காணப்படக்கூடிய நற்பண்புகளில் ஒன்றையும் அவதானிக்க முடியாது.

இலங்கையில் இவர்களின் ஊடாட்டம் 1990களின் பிற்பகுதிகலிருந்தே மிகவும் தீவிரமாக தலைதுக்கியுள்ளது. ஏனெனில், சவூதி அரேபியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களது தௌஹீத் ஜமாஅத்தினரை அடியொற்றியவர்களே அவர்களது கொள்கையை உலக நாடுகளில் பரப்ப வேண்டும் என்பதற்காக உலகத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு குறிப்பாக மத்ரசாக்களில் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மாணவர்களை புலமைப்பரிசில் என்ற தோரணையில் மதினாவில் உள்ள வாஹாபிசத்தைக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகத்திற்கு சகல வசதிகளுடனும் இணைத்துக் கொண்டு அவர்களிடம் காணப்படுகின்ற தௌஹீத் கொள்கையை அம்மாணவர்களுக்கு மத்தியில் மூளைச் சலவை செய்து மீண்டும் அம்மாணவர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புகினற்னர்.

இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக பின்பற்றப்படுகின்ற ஒரு வழிமுறையாக் குறிப்பாக இலங்கையில தௌஹீத் ஜமஅத்தினரிடம் கானப்படுகின்றது.

இலங்கயில் சிறுபாண்மையாகக் காணப்படுகின்ற சோனகர்1990களுக்கு முன்னர் மாற்றுச் சகோதரர்களுடன் இணைந்து அவர்களது சுக மற்றும் துக்கங்களில் ஈடுபட்ட காலங்களை மறக்கமுடியாது.

இவை இந்த தௌஹீத் ஜமஆத்தினரின் மேலதிக்க செயற்பாடு மேலேங்கியபோது விரிசல்களை சந்தித்தன. இக்குழுவினர்கள் தம்மிடையே கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்து இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினர், தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர், போன்ற இன்னோரன்ன பெயர்களில் புதிய இயக்கங்களாக தோற்றம் பெற்று ஒவ்வொரு தனிநபர்களின் பெயர்களிலும் ஒவ்வொரு பள்ளிவாயல்களை தோற்றுவித்து பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்கும் களமாக அப்பளிளிவாயல்களை பயன்படுத்துவதுடன் மற்றவர்களுடன் எவ்வாறு சண்டையிட்டுக் கொள்ளலாம் என்ற வண்முறையை தோற்றுவிக்கும் களமாகவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லீம்களான நாம் வாழ்வது ஒரு பல்லின கலாசாரத்தை பின்பற்றும் நாடு இங்கு வாழும் அந்நியர்களுடன் முஸ்லீம்களாகிய நாம் அழகிய முன்மாதிரியைக் காட்டவேண்டும் என்ற மிகச்சிறிய மனப்பாங்குகூடத் தெரியாத மிகவும் காட்டுமிராண்டிகளாக இந்த தௌஹீத் ஜமாஅத்தினர் காணப்படுகின்றனர். இவர்கள் அவர்களது பெண்கள்மீது உரிமை மீறல்களை புர்கா ஹபாய போன்ற பெயர்களில் கட்டவிழ்த்துள்ளனர். இலங்கையில் மரபு ரீதியாக முஸ்லீம் பெண்கள் உடுத்திய ஆடைகளான சாரி மற்றும் சல்வார்களை தகர்த்தெறிந்து மிகவும் இலகுவாகவும் இலாவகமாகவும் உடுத்திக் கொள்ளக்கூடிய ஆடையான ஹபாயவை இந்த தௌஹீத் ஜமாஅதினரரே அறிமுகப்படுத்தினர். இதன் அடிப்படைக் காரணம் மதமல்ல இவர்களது இயலாமையே, ஏனெனில் தான் கரம் பற்றிக் கொள்ளும் பெண்ணுக்கு ஒரு சவரம் நகைகூட வாங்க்கி கொடுக்க வக்கத்த இந்த தௌஹீத் வாதிகள் அதனை மறைப்பதற்காகவே இந்த புர்கா மற்றும் ஹபாயாவை தமது பெண்களுக்கு திணித்துள்ளனர்.

இலங்கையில் வாழும் அரசியல் வாதிகள் குறிப்பாக முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கிடையில் ஒற்றுமையின்மையும் இந்த தௌஹீத் ஜமாஅத்தினரின் இந்ததகைய காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்குக் காரணம். ஏனெனில் சில அரசியலவாதிகள் இந்த மனித நாகரீகமற்ற தௌஹீத் ஜமாஅதினரை அரசியல் பிழைப்புக்காக நேசிக்கின்றமையும் நேசித்தமையுமே இன்று முஸ்லீம் சமூகம் மாற்றுச் சமூகதத்வர்களுக்கு மத்தியில் வெட்கித் தலைகுனிகின்றது. குறிப்பாக முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்தமுறை நடைமுறைப்படுத்தும் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒரு சதமேனும் தௌஹீத் ஜமாஅத்தனர் சார்ந்த எந்த அமைப்புக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணமானது அவர்களை அங்கீகரிப்பதற்குச் சமமானதாகும்.

இலங்கை அரசாங்கம் மற்றும் எமது சிங்கள், தமிழ், கிரிஸ்தவ உறவுகள் ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காமல் கிரிஸ்தவ அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தியதாக இனங்காணப்பட்டுள்ள தௌஹீத் ஜமாஅத்தினரையும் அதனுடன் இனைந்த அடிப்படை இஸ்லாமிய வாதிகளான ஜமாஅத்தே இஸ்லாம் போன்ற நவீன சிந்தனையாளர்களையுமே பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டும் செய்கின்ற அட்டூளியங்களைச் செய்துவிட்டு அப்பாவிகளின் நிம்மதியைக் குலைத்துவிட்டு உடன்பிறப்புகளயிருந்து மதத்தால் வேறுபட்டவர்களை துவம்சம் செய்துவிட்டு இந்த தௌஹீத்வாதிகள் மறைந்திருக்க எதுவமறியாத அப்பாவி முஸ்லீம்கள் அவமானப்படுத்தப்படுவது எந்தவகையில் நியாயமானது? உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும். ஏன் உப்புத் தின்னாதவன் தண்ணீர் குடிக்க வேண்டும் மாற்று மத சகோதரர்களே ஒரு கனம் சிந்தியுங்கள்.

இலங்கையில் இனிவரும் காலங்களிலும் இவ்வாறான கீழ்சாதித்தனமான தௌஹீத் ஜமாஅத்தினர் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்புகளின் அட்டூளியங்களை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கம் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1.இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களாக தௌஹீத் ஜமாஅத் மற்றுமு; ஜமாஅத்தே இஸ்லாம் போன்ற அமைப்புகளையும் அதனுடன் இணைந்த அமைப்புகளையும் முற்றுமுழுதாக தடை செய்வதற்கதன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2.1990 களுக்குப் பின்னர் புதிதாக புதிய இடங்களில்கட்டப்பட்ட அனைத்து பள்ளவாயல்களையும் அரச உடமைகளாக்கி அவற்றில் நல்ல உளவள நிலையம் அல்லது வேறு ஏதாயினும் நல்ல விடயங்களை போதிக்கும் இடமாக மாற்றுதல் வேண்டும் தவறும் பட்சத்தில் அவற்றை உடைத் தெறிவதற்கான தனிநபர் பிரரேனை அல்லது சட்டமூல ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் செய்தல் வேண்டும் இதற்கு எந்தவொரு அரசியல்வாதியும் குறிப்பாக முஸ்லீம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.

3.இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் எவ்வாறு முஸ்லீம் சமூகம் ஆடையணிந்தனரோ அதேவகையான ஆடைகளையே அவர்கள் அணிய வேண்டும் என்ற சட்டத்தினை அரசாங்கம் கொண்டுவரவேண்டு;ம்.

4.பெரும்பாண்மை முஸ்லீம்களால் மேற்கொள்ளப்படுகின்ற மத அணுஸ்டானங்களை மட்டும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் பினபற்ற வேண்டும் என்பதுடன் இலங்கையில் நோன்பு மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்கள் ஒரு நாளாகவே இருக்க வேண்டும் என அரசாங்கம் சட்ட ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

5.ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உள்ள ஒவ்வொரு முஸ்லீம் ஊரிலும் வெள்ளிக்கழமைகளில் ஒரு ஜூம்மா மட்டுமே நடைபெற்வேண்டும் அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஜூம்மாவும் நடைபெற்ககூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக சட்டங்களை இயற்றுதல் வேண்டும்

இவ்வாறான செயற்பாடுகளை செய்தால் இலங்கையில் இந்த கீழ்த்தரமான தௌஹீத்வாதிகளின் அடிப்படைச் சித்தாந்தங்களிலிருச்து எமது உறவுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை இல்லாதெழிக்கலாம்.

சுpந்தித்து செயற்பட்டால் நிம்மதியான இலங்கையையும் சமூகங்களுக்கடையிலான புரிந்துனர்வினையும் ஏற்படுத்தலாம்.

நன்றி.

எம். ஏ. அகமட்

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*