ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தி காணொளி வெளியிட்ட மௌலவியை தேடும் பொலிஸார்

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார்.

இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், செட்டிக்குளம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த எஃப். நவுமான் என்ற மௌலவியே சமூக வலைத்தளத்தில் இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். 8 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய மௌலவி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*