பொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்!

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களே பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களில் அப்துல் காதர் ஃபாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புலஸ்தீனி ராதேந்திரன் என்ற சாரா, நீர்கொழும்பு – கட்டுவாப்பட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*