மட்டக்களப்பில் பதற்றம்! தமிழ் இளைஞர்களை கடுமையாக தாக்கிய அதிரடிப்படை!

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியில் விசேட அதிரடி படியினரால் சரமாரியாக தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(11) காலை 9.00 மணியளவில் மடக்களப்பு கரடியணாறு பகுதிக்கு சென்ற விசேடே அதிரடி படையினர் அந்தப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவரை மரம் வெட்டியதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான இளைஞனுக்கு உதவி செய்யச் சென்ற இளைஞர் ஒருவரையும் விசேட அதிரடி படையினர் தாக்கியுள்ளனர்.

விசேட அதிரடி படையினரின் தாக்குதலுக்கு உள்ளான கரடியணாறு பகுதியை சேர்ந்த மன்னன் கஜந்தன் 27 வயது என்ற இளைஞர் தற்போது விசேட அதிரடி படையினரின் தீவிர கண்காணிப்பில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

இன்று(11) காலை 9.00 மணியளவில் மடக்களப்பு கரடியணாறு பகுதிக்கு சென்ற விசேடே அதிரடி படையினர் அந்தப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் மீது மரம் வெட்டியதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபரை உடனடியாக இழுப்பிடிச்சேனை வன பரிபாலனசபைக்கு விசேட அதிரடி படையினர் கொண்டு சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளாகியுள்ள நபரின் உடல் நிலை ஆபத்தன நிலையில் இருந்தமையினால் குறித்த இளைஞரை பொறுப்பேற்க வனப் பரிபாலனசபை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர் வனபரிபாலன சபையின் வாகனத்தில் படுகாயமடைந்த இளைஞரை ஏற்றிய விசேட அதிரடி படையினர் ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவரது உடல்நிலை மோசமாக இருந்ததனால் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு படுகாயமடைந்த இளைஞனுக்கு விசேட அதிரடி படையினரின் விசேட கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலுக்கு உள்ளாகிக்கிய இளைஞரை பார்வையிட உறவினர்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மரம் வெட்டியதாக கூறி குறித்த இளைஞர் மீது சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடாத்திய விசேட அதிரடிப்படையினர் அவரை ஒரு தீவிரவாதியைப்போல் சப்பாத்துக்காலால் உதைத்து சித்திரவதை செய்ததாகவும் இதனால் மயக்கமடைந்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் வைத்திய சாலைக்குள் ஆயுதங்களுடன் குறித்த இளைஞனை சுற்றி விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த இளைஞரை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் குறித்த சம்பவம் சம்பந்தமாக கரடியணாறு பொலீஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக தங்களால் முறைப்பாடு பதிவுசெய்ய முடியாது என கரடியணாறு பொலீசார் தெரிவித்ததாகவும் பின்னர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறைப்பாடு பதிவு செய்ததாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

195Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*