யாழில் பெண் பனையை ஆண் பனையாக மாற்றிய ஆலயத்தில் நேற்றிரவு நடந்த திகில்! மெய்சிலிர்த்த மக்கள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கில் அமைந்துள்ள நூற்றாண்டுகால பழமைவாய்ந்த முருகன் ஆலயமான முதலியார் கோவிலின் வருடாந்த உற்சவ இறுதி நாள் பூஜை வழிபாடுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தன.

மூளாய் ஞானசம்மந்தக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவம், கடந்த மாதம்27ஆம் நாள் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் சிறப்புக் குடமுழுக்கு மற்றும் தீப ஆராதனைகளுடன் வேலாயுத ரூபராய் முருகன் மயில் மற்றும் குதிரை வாகனங்களில் வெளிவீதியுலா எழுந்தருளியிருந்தார்.

உற்சவத்தின் 11ஆவது தினமாகிய நேற்றுக் காலை, 108 சங்குகளால் மூல மூர்த்திக்கு சங்காபிஷேகம் இடம்பெற்றதுடன் அன்னதானமும் நடைபெற்றது.தொடர்ந்து சிந்துபுரம் துளசிகரன் தலைமையிலான குழுவினரின் விசேட மேளக்கச்சேரியுடன் மாலை நேர வசந்த மண்டபப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அலங்கரிக்கபட்ட பூந்தண்டிகையில் முருகப்பெருமான் வேலாயுதரூபராய் மயில்வாகனமேறி வெளிவீதியுலா வலம்வந்தார்.

ஆலயத்தின் வடக்கு வீதியில் சுவாமி எழுந்தருளியபோது தமிழரின் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் வீர விளையாட்டுக்கள் என்பன நிகழ்த்தப்பட்டன.

முதலியார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேரின்பநாதன் மற்றும் சுப்பிரமணியம் சகோதரர்கள் தலைமையில் தமிழரின் வீர விளையாட்டுக்களான கம்படித்தல், கம்பு சுழற்றுதல், நெஞ்சாங்கு சுற்றுதல் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

மேலும் ஆலயத்தின் முன்வீதி வளாகத்தில் சங்கிலித் தீப்பந்தம், கம்பு தீப்பந்தம் என்பன அதி அபாரமாய் சுழற்றப்படன.

கொழுந்துவிட்டெரிந்த தீப்பந்தங்கள் அதிவேகமாய் சுழற்றப்பட்டமை அங்கிருந்த மக்களைத் திகிலடைய வைத்ததுடன் பேரின்பநாதன் மற்றும் சுப்பிரமணியம் சகோதரர்களின் திறமையினையிட்டு பலரும் மெய்சிலிர்த்தனர்.

அருகிவரும் தமிழரின் வீரப் பாரம்பரியக் கலைகளிடையே இந்த நிகழ்வுகள் பலரையும் நெகிழவைத்திருந்தமையினை அவதானிக்கமுடிந்தது.

இதனைத் தொடர்ந்து வேலாயுத ரூபருக்கு திருவூஞ்சல் பூசைகள் இடம்பெற்றதுடன் முதலியார் ஆலயத்திற்குரிய திருவூஞ்சல் பிரபந்தமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல் தெய்வமான வயிரவர் பூசையும் சண்டேஸ்வரர் வழிபாடும் இடம்பெற்று நேற்றைய பூஜைகள் நிறைவுபெற்றன.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பரமகுரு ஸ்ரீ முதலியப்பெருமான் ஆலயம் குறித்து கிராம மக்களிடையே பலத்த நம்பிக்கைகள் நிலவிவருகின்றன.

தொண்ணூறுகளில் இடம்பெற்ற யுத்த காலத்தில் இராணுவத்தினரின் செல் வீச்சுத் தாக்குதல்களின்போதும் விமானத் தாக்குதல்களின்போதும் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த தம்மைக் காப்பாற்றியிருந்ததாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.

மேலும் மூலமூர்த்தி ஊர் மக்களின் குற்றக்களைப் பொறுக்காத தன்மையுடையவர் என்றும் ஆலய முன்வீதி வளாகத்தில் நின்ற பெண் பனையொன்றை ஆண் பனையாக மாற்றியவர் என்றும் மக்களிடையே கடந்த தசாப்தங்களாக ஒரு ஐதீகம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*