பதுளையில் நடந்தேறிய பயங்கரம்! பொலிஸ் கான்ஸ்டபிளை வெட்டி வீழ்த்திய மீன்காரர்!

பதுளை பள்ளக்கட்டு பகுதியில் மீன்கடைக்காரர் மீன் வெட்டும் கத்தியால், பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவீழ்த்திய கொடூரச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. சட்டவிரோத மீன் கடையை அகற்ற முற்பட்ட போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பள்ளக்கட்டுவை நகரின் விஸ்தரிப்பு வேலைகளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், எல்ல பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதன்போதே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மீன்கடையை அகற்ற, குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்த போது, மீன்கடைக்காரருக்கும், அவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிவெட்டு விழுந்துள்ளது.

இதனால் பலத்த வெட்டுக் காயங்களுடனான பொலிஸ் கான்ஸ்டபிள் ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். உடனடியாகவே மீன்கடைக்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*