யாசகம் பெற்று கோடிஷ்வரனாக மாறிய யாசகர்! இலங்கையர்களை திகைப்பில் ஆழ்த்திய நபர்

25 வருடங்கள் யாசகம் செய்து அதன்மூலம் பணக்காரராகிய 65 வயதான பார்வையற்ற நபர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாசகம் செய்த பணத்தில் 3 வீடுகளை நிர்மாணித்து வங்கயில் 5 லட்சம் ரூபாய் வைப்பிட்டுள்ளார்.

தான் தனது வீட்டு தோட்டத்தில் நிர்மாணித்த 2 வீடுகளை மகள்கள் இருவருக்கு சீதனமாக வழங்கியுள்ளதாகவும், வாடகைக்கு வழங்குவதற்காக இன்னும் ஒரு வீட்டை நிர்மாணித்து கொண்டிருப்பதாகவும் அவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கம்பஹா – கொழும்பு கோட்டைக்கு இடையில் பயணிக்கும் ரயிலில் யாசகம் செய்து வருகின்றார்.

அவர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் கையில் 4000 ரூபாய் பணம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபரின் மனைவி உயிரிந்துள்ளார். அன்று முதல் அவர் ரயில் மற்றும் பேருந்துகளில் யாசகம் பெற்று வந்துள்ளார்.

அவரது இரண்டு மகள்களும் திருமணம் செய்துள்ளனர். அவர்களது கணவர்கள் நல்ல தொழில் செய்து வருகின்றனர். மகள்கள் இருவருக்கும் மோட்டார் வாகனங்கள் உள்ளது. யாசகம் மூலம் மாதம் 150000 ரூபாய் பணம் சம்பாதிப்பதாகவும், கண்கள் தெரியாமல் போனமையனால் அதனை ஆசிர்வாதமாக்கி கொண்டதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார.

மிகவும் தூய்மையாக ஆடை அணியும் இந்த நபர் ரயிலில் யாசம் எடுக்கும் விடயம் இரண்டு மகள்களுக்கும் தெரியும் எனவும் தான் யாசகம் பெற முச்சக்கர வண்டியிலேயே சென்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது தந்தை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதனை அறிந்த மகள் கோட்டை பாதுகாப்பு தலைமையத்திற்கு தனது சொகுசு மோட்டார் வாகனத்திலேயே வருகைத்தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

45Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*