நொடிப்பொழுதில் கொடூரமாக மாறிய சிங்கம்! அன்புள்ள எஜமானுக்கு நிகழ்ந்த பயங்கரம்!!

வீட்டில் அடைத்து வைத்த ஆண் சிங்கம் ஒன்று தனது எஜமானாரான 33 வயதான இளைஞரை அடித்துக்கொன்ற சம்பவம் செக் குடியரசில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் பிராசெக் எனும் குறித்த இளைஞர் தனது வீட்டில் ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கம் ஆகிய சோடியினை வளர்த்துள்ளார். அவற்றினை வீட்டு வளாகத்தினுள் அடைத்த நிலையிலேயே அவர் வளர்த்துவந்துள்ளதுடன் அவ்வப்போது அவற்றின் அருகே அணுகியுள்ளமைக்கான புகைப்படச் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன.இந்த நிலையில் குறித்த இரண்டு சிங்கங்களையும் வைத்து இனப்பெருக்கம் செய்யும் நோக்கில் ஒரே கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.

இவ்வாறிருக்கையில் கூண்டைத் திறந்து அவர் உள்ளே சென்றபோது அவருடன் அன்பாக பழகிய ஆண் சிங்கம் கொலைவெறியோடு பாய்ந்து அவரைக் குதறியெடுத்துள்ளது. இரத்த வெள்ளத்தில் அவரது உடலம் யாராலும் மீட்கமுடியாத நிலையில் உள்ளே இருந்துள்ளது.

எவ்வாறாயினும் அவரது உடலத்தை மீட்பதற்காக குறித்த இரண்டு சிங்கங்களும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டன.

இதேவேளை, குறித்த நபர் ஏற்கனவே வீட்டில் வைத்து விலங்குகளை வளர்த்த குற்றத்திற்காக அபராதம் செலுத்தியுள்ளார் என்றும் அந்த விதிமுறையினை மீறியே இரண்டு சிங்கங்களையும் வளர்த்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

17Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*