ஜெனீவாவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ள தமிழர்! புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்படும் சவால்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பதிலாக ஜெனிவா செல்லும் மூவர் அடங்கிய குழுவில் செல்லவுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் புலம்பெயர் அமைப்புக்களுடன் எதிர் எதிராக செயற்பட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கோருவதற்காக செல்லவுள்ள இந்த மூவர் அடங்கிய குழுவை புலம்பெயர் அமைப்புக்கள் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் யுத்தக்குற்றங்கள் பொறுப்புக்மூறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இன்நிலையில் அரசாங்க தரப்பில் செல்லவுள்ள தமிழரான வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இம்முறை பல சவால்களை எதிர்நோக்க நேரிடும் என கூறப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (06) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோரிக்கை விடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

63Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*