கரவெட்டியின் வளர்ச்சியை உடைக்கும் பினாமிகளை விரட்டுவோம்!!!!

கரவெட்டிப்பிரதேச சபையை குழப்புவதற்கன சில அரசியல்வாதிகளும் அவர்களது அடிவருடிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் செயற்பாடுகள் ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளது .கரவெட்டிப்பிரதேசசபை தவிசாளர் திரு ஐங்கரன் அவர்களை குறிவைத்து சில சமூகவலைத்தள பினாமிகள் அவரைப்பற்றி தவறான தகவல்களை வேண்டுமென்றே கீழ்த்தரமாக பரப்பிவிட்டு பின்னர் நல்லவராக வேசம் போடுவது வேடிக்கை..அன்பான கரவெட்டி வாழ் மக்களே !கரவெட்டி பிரதேசசபையின் வளர்ச்சி மற்றும் தவிசாளரின் துணிவு மிக்க தூரநோக்கான செயற்பாடுகளை தற்போது கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம். ஒரு சில கரவெட்டியில்உள்ள காழ்ப்புணர்ச்சியுடன் திரியும் அடிவருடிகள் தங்களையும் தங்களது பெயர்களையும் சமூகத்தில் முன்னினைப்படுத்துவதற்காக இவ்வாறன கேவலமான சமூகவலைத்தள அரசியலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். புதிதாக நாட்டிய மரக்கன்றை ஆடு கடிக்கத்தான் செய்யும்… வளர வளர கடித்த ஆட்டுக்கே எட்டமால் போய்விடும் என்பது யதார்த்தமான உண்மை. தவிசாளரை பற்றி வலைத்தளங்களில் கீழ்த்தரமாக பதிவிடும் அன்பர்களே
உங்கள் குப்பை படிந்த மனதின் எழுத்துக்களின் எண்ணங்களின் வெளிப்பாடுகளை எண்ணி நீங்களே தலைகுனியும் காலம் நிச்சயமாக வந்துள்ளது..
இனிமேல் இவ்வாறனவர்களின் செயற்பாடுகள் அவற்றின் நோக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது..
வானத்தை அண்ணாந்து பார்த்து காறிஉமிழ்ந்து அவை மீண்டும் தம்முகத்திலேயே வீழும் என்பதனை உணராத அறிவாளிகளின் அநாகரீக செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு..
உங்கள் உண்மை நிலையினை நீங்கள் செய்த செயலினால் அம்பலப்பட்டுள்ளது..
நல்லவர்கள் ஒரு போதும் வீழ்வதில்லை..
சூரியனைக்கண்ட பனிபோல் சூழ்ந்து நிற்கும் இருளும் நீங்கி சுடராக பிரகாசிக்கும் தவிசாளர் திரு ஐங்கரனின் நல் மக்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்..

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*