விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டது? கே.பி எவ்வாறு கைது? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார்.

Loading...

அவர் தெரிவித்ததாவது,

LTTE அமைப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டமையினாலேயே அந்த அமைப்பு வலிமைப்படுத்தப்பட்டது.

எனினும், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் யுத்தத்தின் இறுதிப்பாதியில் சர்வதேச ஒத்துழைப்பை எமது நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

சர்வதேசத்திடமிருந்து கிடைக்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை, அந்தப் பிரிவுகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் காணப்பட்டது. அந்த சாதகத்தன்மையே எமக்கு வலிமையைக் கொடுத்தது.

கே.பி. மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவ்வாறான நாடொன்றிடம் கோரிக்கை விடுத்து, ஏதேனுமொரு குற்றத்துடன் தொடர்புடையவரை எமது நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை அப்போது காணப்பட்டது.

அது பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்குள் உள்ளடங்கும் நாடு என்பதால் அதனை முன்னெடுக்க முடிந்தது.

பொருத்தமான இடத்தில் பொருத்தமான அதிகாரிகள் காணப்பட்டமையே, யுத்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

அவ்வாறான குழுவிற்கு, அரசியல் ரீதியாக தலைமைத்துவம் கிடைத்தால் நிச்சயமாக அதன் பெறுபேறு மகிழ்ச்சியானதாக அமையும்.

என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே குறிப்பிட்டார்.

9Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*