இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நாய் கவ்விச்சென்ற மனித தலை யாருடையது?

பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading...

குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும்,

நாய் ஒன்று மனித தலையை கவ்விச் செல்வதாக பிரதேசவாசிகள் காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை குழுவின் அவதானம், அண்மையில் வெளிநாட்டு ஜோடி ஒன்றின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நோக்கி திரும்பியுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பில் சொகுசு குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியின் சாரதி, அந்த வீட்டின் அறையினுள் மர்மமான முறையில் உயரிழந்திருந்தார்.

கதிரையொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்த அவரது சடலம் தொடர்பில் அந்த வெளிநாட்டு ஜோடி இலங்கை போலீசாருக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொரட்டுவை பகுதியில் நபரொருவர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அவரே இந்த வெளிநாட்டு ஜோடிக்கு சாரதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய மீட்கப்பட்டுள்ள மனித தலை, குறித்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அதனை உறுதி செய்வதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுகிறது.

15Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*