வட மேற்கு கடற்படையினரால் நேற்று கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 02 வலைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட 2487 கிலோ கிராம் மீன் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 02 ஆம் திகதியும் இந்தப் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேருடன் 04 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment