ஈழத்தில் வடக்கும் கிழக்கும் புதிய பாலத்தால் இணையவுள்ளன!

முல்லைத்தீவு கொக்கிளாய்-புல்மோட்டை வீதியில் கொக்கிளாய் களப்பு ஊடான பாலம் மற்றும் அதன் மாற்று வீதி என்பன அமைக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading...

இதுதொடர்கான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

முல்லைதீவு கொக்கிளாய்-புல்மோட்டை வீதியில் கோக்கிலாய் களப்பு ஊடாக கொக்கிளாய் பாலம் மற்றும் அதன் பிரவேச வீதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 25வது விடயம்)

கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கிடையில் கரையோரத்தில் தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முல்லைத்தீவு கொக்கிளாய்-புல்மோட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாய் களப்பு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டைக்கிடையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக செக் குடியரசின் CSOB வங்கியிடமும் உள்ளுர் வர்த்தக வங்கியிடமும் நிதி வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த வங்கியுடன் கடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்தையை நடத்துவதற்கான ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

36Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*