தவறான அரசியல் கொள்கைகளினால் பிறக்கும் சந்ததியும் பாதிப்புக்களை சந்திக்கும்

தவறான அரசியல் கொள்கை மற்றும் அரசியல் தீர்வுகள் காரணமாக, புதிதாகப் பிறக்கும் சந்ததியும் அதன் பாதிப்புக்களைச் சந்திக்க நேர்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய வர்த்தக சபையின் 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயர் சரியான தொலைநோக்குடன் நாட்டைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவேண்டிய காலம் தோன்றியிருப்பதாகவும் சுறினார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஒரு பொது இணக்கப்பாடு எம்மத்தியில் இல்லை. அரசாங்கமோ அமைச்சின் செயலாளரோ வேறுபடுவதன் மூலம் நாட்டின் அரசியல் கொள்கை அடிக்கடி மாற்றமடைவது கவலைக்குரிய விடயமாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, நாட்டின் பூகோள அமைவையும், மனித வளங்களையும் சரியாக இனங்கண்டு செயற்படுவது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமாகும் என குறிப்பிட்டார்.

மனித வளங்களை மேம்படுத்துவதற்காக அரசியல் கொள்கைகளை வகுக்கும் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*