இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ; அமெரிக்காவில் தமிழ்ப்பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு.!

தமிழர்களின் தேசிய திருவிழா பொங்கல் உள்ளிட்ட நாட்கள் அடங்கியுள்ள ஜனவரி மாதத்தினை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் நடப்பு மாதமான ஜனவரியை தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்திட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்களின் கோரிக்கையினை ஏற்று நடப்பு ஜனவரி மாதத்தினை தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர்.

இது தொடர்பாக ராய் கூப்பர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகில் நெடுங்காலமாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் மொழிகளுள் ஒன்று தமிழ். உலகில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழி தமிழ். அதுவே தமிழர்களின் அடையாளமும் கூட. வடக்கு கரோலினாவில் வாழும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழர் கலாச்சாரத்தை இங்கு பாதுகாத்து வந்துள்ளனர். தமிழ் மொழியும் நமது கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதன்படி, தமிழர்களோடு இணைந்து தைப்பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Please Share

92Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*