உலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்!

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன.

வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதன் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது.

கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டதன் பின்னர், உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது.

இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து இறந்து கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மல்லார்ட் எனும் இன வாத்து முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

78Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*