மக்கள் தாக்கியதில் 12 அதிரடிப்படையினர் காயம்; பல மணிநேரம் ஏற்பட்டிருந்த பதற்றம்!

திருகோணமலை கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் மஹாவலி ஆற்றுப் படுகையில் சட்டவிரோதமாக மணல் அகழ்கின்றவர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் 12 படைத்தரப்பினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்வதற்காக கடற்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களும், பிரதேசவாசிகளும், படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெஃபட்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படையினர் கூட்டத்தை எச்சரிப்பதற்காக வான்நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். எனினும் தொடர்ந்து பிரதேச வாசிகளும் மணல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்களும், படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போதே 12 படைத்தரப்பினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் பொது கண்டல்காடு பகுதியைச் சேர்ந்த 22 வயனதான நபர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

6Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*