மைத்திரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! மே மாதத்திற்கு முன் மற்றுமொரு மாற்றம்..

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் திகதி தொடர்பில் ஜனாதிபதி இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 31மே் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவைக்கு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி யோசனை சமர்ப்பித்து இது தொடர்பான அறிவிப்பை அமைச்சரவைக்கு விடுத்துள்ளார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் நடத்துவது என்பது தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை புதிய அல்லது பழைய முறைமையின் கீழ் நடந்த நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்குமாயின் உரிய முறைக்கு அமைய தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*