ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி கோரிக்கைகள் குவிந்துள்ளன..

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி தனக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் குவிந்துள்ளதாம புத்தசாசன அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பௌத்த பீடங்களும் தனக்கு ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதான பௌத்த தேரர்கள் பலர் தனிப்பட்ட முறையில் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பௌத்த மதம் அல்லாத அமைப்புகள் கூட கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி ஏற்கனவே புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*