அடப்பாவமே!!! என்னடா இது புதுப் புரளியா இருக்கு!!!! நிம்மதியா இருக்க விடவேமாட்டாங்க.

மீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்காக பாதள உலக குழுக்களின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சி குறித்த தகவல்கள் புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

புளியங்குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பாதள உலகத்தவர்களுடன் எப்படி தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறித்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தகவல் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட மிக முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் பாதளஉலகத்தவர்களிற்கு பணம் வழங்குகின்றனர் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

3Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*