யாழில் மது போதையில் பொலிசார் ஒருவர் செய்த செயலால் பறிபோன உயிர்!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் மதுபோதையில் மலசல கூடம் கழுவுவதற்கு பயன்படுத்தும் பெனாயிலை குடித்ததால் உயிாிழந்துள்ளாா்.

Loading...

ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (12) இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையின் நிமித்தம் மலசல கூடத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பெனாயிலை குடித்துள்ளார்.

இதனை அறிந்த சக பொலிஸார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று காலை அனுமதித்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*