முகநூல் மூலம் திட்டமிட்டு தமிழர்களுக்கு விரிக்கப்படும் வலை!

தமிழர்களை கொன்று குவித்த சில உதிரி கட்சிகள் கூட இன்று கூட்டமைப்பை விமர்சித்து சிதைக்க வேண்டும் என முயற்சிக்கின்றன. என்று நாவிதன்வெளி பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து நேற்று மாலை மக்கள் சந்திப்பின்போதே பாராளுமன் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து உரையாற்றிய கோடீஸ்வரன்;

தமிழர்களை கொன்று குவித்த சில உதிரி கட்சிகள் கூட இன்று கூட்டமைப்பை விமர்சித்து சிதைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் மூலம் சிலர் செயற்படுவதை நாங்கள் அவதானிக்கின்றோம். இந்த நிலையில் தான் தமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டும்.

சில ஊடுருவிகள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக எம்மை சிதைக்க முகநூல், மற்றும் பல சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயங்களையும் முன்வைத்து உளவியியல் ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாற தாக்கத்தின் மூலம் தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் வெறுக்கின்ற நேரம் இலகுவாக பேரினவாத கட்சிகளும், அவர்களின் உதிரி கட்சிகளும் தமிழர்கள் மத்தியில் உள்வாங்கப்படலாம் என திட்டங்களை வகுக்கின்றன.

கடந்த காலங்களில் ஏனைய சமூகத்தவர்களின் பகுதியில் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குன்றியளவிலே காணப்பட்டது. இதற்கு நாங்கள் உரிமை போராட்டத்தினை முன்னெடுத்தது காரணமாகும்.

அபிவிருத்தியை குறைவாக பார்த்து எங்களது தேசிய பிரச்சினையை தமிழர்களது இன பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கு முயற்ச்சிகளையும் அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்ததன் காரணமாகத்தான் நாங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கியிருந்தோம்.

ஏனைய சசோதர இனத்தவர்கள் அபிவிருத்திக்கான பாதையை முழு மூச்சோடு முன்னெடுத்து செயற்பட்டனர். அவர்களுக்கு இருப்பு குறித்து ஜயப்பாடுகள் தோன்றவில்லை.

ஆனால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பிரச்சினைக்கான தீர்வுகளுக்கான நகர்வுகளை முன்னெடுக்கும்போது அபிவிருத்தியையும் சமமாக செயற்படுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேசத்திற்கு 2019 ஆண்டிற்கான அபிவிருத்திக்கான நிதியிலிருந்து முந்நூறு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கப்போவதாக தெரிவித்தார். இதன் மூலம் 150 பயனாளிகள் நன்மை பெறுவதோடு வீதிகள், ஆலயங்களுக்கு குறிப்பிட்டளவு ஒதுக்கீடுகளை செய்யவேண்டியுள்ளது. இவை கிராமங்களின் வளர்ச்சி பாதையில் பாரிய மாற்றம் ஏற்படும் என கருத்துரைத்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சி.குணரெட்ணம், அ.சுதர்சன், மு.நிறோஜன், நா.தர்சினி, கலைமகள் வித்தியாலய அதிபர் பாலசிங்கம், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*