“வெட்டிவருகிறார்கள் ஓடுங்கள்” வதந்தியால் பதறியடித்து ஓடிய மக்கள், எல்லைக் கிராமங்களில் பதற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தமிழ் முஸ்லீம் கிராமங்களின் எல்லைப்புகுதியில் சில விசமிகளினால் மேற்கொள்ளப்பட்ட வதந்திகளினால் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நேற்றைய(11) தினம் தமிழ் மக்களினால் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(11) இரவு ஏறாவூர் எல்லைப்பகுதிகளான சவுக்கடி குடியிருப்பு ஐயன்கேணி பகுதிகளில் சிலர் வதந்தி பரப்பி இனக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கச் சென்று “முஸ்லீம்கள் வெட்டிவருகிறார்கள் ஓடுங்கள்” என்றும் முஸ்லிம் பகுதிகளுக்கு சென்று “தமிழர்கள் வெட்டிவருகிறார்கள் ஓடங்கள்” என்று கூறி வதந்திகளை பரப்பியுள்ளனர்.இதனால் குறித்த பகுதிகளில் பெரும் பதற்ற நிலை உருவாகியதுடன் எல்லைக்கிராமங்களில் இருந்த தமிழ் முஸ்லீம் மக்கள் பலர் பயத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றதுடன் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான பல கசப்பான சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் அதனை பெரிது படுத்தி தமிழ் முஸ்லீம் மக்களிடையே இனக்கலவரங்களை தூண்ட சில தீயசக்திகள் முயற்சி செய்துவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்டதை தமிழ் மக்கள் மிகப்பெரிய இனவாத நடவடிக்கையாக பார்ப்பதுடன் ஹிஸ்புல்லா அவர்கள் தமிழ் மக்கள் மீதான தனது நடவடிக்கை குறித்து தான் பேசிய காணொளி பதிவு சம்பந்தமாக இதுவரை பகிரங்கமாக எந்தவித தெளிவுபடுத்தல்களையும் செய்யாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மீதான பயமும் சந்தெகங்களும் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டே உள்ளது. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு என தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

11Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*