களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி எவ்வாறு மண்டைகழுவப்பட்டார்?? புரிந்து கொள்ளுங்கள் தமிழ் பெற்றார்களே!!

-Mohamed Nasir-
தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகின்ற மாணவி கிருஷ்ன குமார் கௌரி தேவி என்பவராவார்.
நான்கு வருடங்களாகவே இம் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டிராத, கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் தற்போது கூச்சலிட்டு தன் மகளின் செயலுக்கு இனவாதம் பேசுவதில் எந்தவித நியாயமுமில்லை.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அம் மாணவியின் வீட்டார் பலதையும் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது மகளின் சுயவிபரத்தையும் கூறியபோதுதான், அம் மகளின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளளது.
எங்களது மகள் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்ததென்றும் , பெற்றோர் மரணித்ததால் அவர்களோடு உறவாகயிருந்த நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறிய விடயத்தை செவியுற்ற கௌரி தேவிக்கு, மாற்றம் தேவைப்பட்டுள்ளது.அதை நாங்கள் சாதகமாக பயன்படுத்தினோம்.
இவ்விடயத்தை நான்கு வருடமாக அவரது பகுதியால் வழக்கமான தொழில்கள் செய்து வரும் முஸ்லீம் சகோதரர்களிடம் தெரிவித்து
,”நான் இஸ்லாமிய பெண், என்னை அழைத்துச்செல்லுங்கள் “என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இவ் விடயத்தை அப்பவே மௌலவிமாருக்கு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அதற்கு மௌலவிமார்கள், இந்த வயதில் இஸ்லாத்துக்கு வருவதாகயிருந்தால் பெற்றோருடன்தான் வரவேண்டுமென்று சொல்லியனுப்பியுள்ளார்கள்.
இந்த மாணவியை களுவன்கேனியில் அவரது சுற்றத்தார் சோனகத்திட புள்ள என்றே அழைப்பார்களாம்.
பெற்றோருடன் முறன்படும்போது “சோனகத்திட புத்திய காட்டுறா ” என்றுதான் ஏசுவார்களாம்.
இவ்வாறான நிலையில்தான் இம் மாணவியின் மனதில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியுள்ளது.
முதலில் நெற்றியில் பொட்டு வைப்பதை நிறுத்தியுள்ளார்.
அது மாத்திரமின்றி பாடசாலைக்கு சீருடையில் செல்லும்போது முழங்கால் தெரியாதளவு ஆடை அணிவதோடு, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது டவுசர் அணிந்தே சென்றிருக்கிறlறாராம்
சென்ற வருடம் ரமழான் மாத நோன்பையும் பிடித்திருக்கிறார்.
இவை அத்தனையும் இம் மாணவியின் செயற்பாட்டில் நடந்தேறிய வேளை கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் இன்று தன் படிமுறை வளர்ச்சியில் 18 வயதை அடையும் வரை காத்திருந்து “இஸ்லாத்தை படிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் ” என பெற்றோருக்கு சுயமாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறியதை மறைத்து,
அம் மாணவி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த இஸ்லாமிய ஆசிரிய ஆசிரியைகள் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனென்றால் அந்த பாடசாலை அதிபர் கூட ஏன் அங்குள்ள தமிழ் ஆசிரியர்கள் கூட கவனிக்க வில்லை.
களுவா்ன்கேணி பாடசாலைக் கல்வியின் உயர்ந்த அடைவு மட்டத்திற்கு இவ் இஸ்லாமிய ஆசிரியர்களின் பங்களிப்பு மிகையானது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா!
இறைவனின் ஏற்பாடு இம் மாணவி இஸ்லாத்தையே காதலிக்கிறார்…. நீங்கள் கூறுகின்ற ஆசிரியரையல்ல.
கடந்த 4வருடங்களாக அவர் இஸ்லாத்துக்குள் வர முயற்சித்திருக்கிறார்.
– 18வயது பூர்த்தியாகும் வரை அவர் காத்திருந்து இந்த முடிவினை எடுத்துள்ளார்,
இம் மாணவியின்
உளத்தூய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம்..
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அம் மாணவியின் பெற்றோர்,
பிள்ளை விரும்புகின்ற மதத்தை பின்பற்ற சம்மதம் தெரிவித்திருந்தும், அதனை முறியடிக்கவே ஓரிரு இனவாதிகள் முன்னின்று செயற்பட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.
அன்பின் சகோதர சமூகமே,
நமக்குள் பிரிவினை வேண்டாம்
பிரிக்கத்துடிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம்.
நம்மை பிரிக்க பல்வேறு சக்திகள் கிளம்பியிருக்கின்றன.
அவதானமாகயிருப்போம்,
மாணவி கௌரிதேவி சுயமாக பெற்றோருடன் இணைந்து செல்ல இணக்கம் தெரிவித்தால் அழைத்துச்செல்லுங்கள்.
தனி நபரின் விடயத்தை சமூக பிரிவினையாக பார்ப்பதை தவிர்ப்போம்…

35Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*