இலங்கையில் ஹெரோயின் போதை-தாவுத் இப்ராஹிம் தொடர்பு

இலங்கையில் அண்மைக்காலங்களில் மீட்கப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருட்களுடன், இந்தியாவின் பிரபல பாதாளக்குழுத் தலைவரான தாவுத் இப்ராஹிம் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஸின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் மறைந்திருப்பதாகவும் இந்தியத் தரப்பில் குற்றம் சுமத்தப்படுவதுடன், எஃப்.பி.ஐயினால் தேடப்பட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மாதம் தெஹிவளையில் 3.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான பெருந்தோகையான ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பங்களாதேசை சேர்ந்த சிலர் கைதாகியுள்ளனர். இந்தவிடயம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள பங்களாதேஸின் ஊடகம் ஒன்று, இவ்வாறு மீட்கப்பட்ட போதைப் பொருளுக்கும் தாவுத் இப்ராஹிமிற்கும் தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

7Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*