மஹிந்தவின் விசேட எச்சரிக்கை! பாரிய ஆபத்து வருகிறதாம்!!

ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

நாட்டில் பொருளாதாரம் எவ்வேளையிலும் படுபாதாளத்திற்குச் செல்லும் என்பதே முதல் ஆபத்து என அவர் தெரிவித்ததோடு, புதிய அரசமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த ஆபத்து என மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 19வது திருத்தத்தின் காரணமாக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது, வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம். இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

21Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*