மூளைச்சலவை செய்யப்படும் தமிழ் மாணவர்கள் : குற்றம்சாட்டும் மாணவியின் தந்தை!

மட்டக்களப்பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களால் தமிழ் மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு – களுவங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவன்கேணி உள்ள பாடசாலையில் கற்ற மாணவியொருவர் மதம் மாற்றம் செய்யப்பட்டு தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றுள்ளதாக மாணவியின் தகப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம், முஸ்லிம் சமூகமே உனது மதத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன்மாற்றத்தை கூட்டாதே இனகலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து தெரிவித்த மாணவியின் தந்தை, பாடசாலையில் உள்ள முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தனது புதல்விக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளாதாக குற்றம் சாட்டினார்.

27Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*