தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்-IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள்
IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு:

48.09% வீதமானவர்கள்(27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்)இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்)கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள்(2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவாணந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

IBC தமிழ் மற்றும் லங்காசிறி இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

25Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*