நானே ஆளுநர் பதவியை கேட்டுப்பெற்றேன் – ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இனி நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் இன்று -07- தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கி மாகாணத்தில் நிலவுகின்றபிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைஜனாதிபதியிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன்.

ஒரு வருட காலமே ஆளுநராக பதவி வகித்து விட்டு அடுத்த வருடத்திற்குள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பேன்.

மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் பல இன்னல்கள் கிழக்கில் காணப்படுகிறது. இதற்காக பூரண இதய சுத்தியுடன் கிழக்கின் நண்பனாக செயற்படுவேன்.

ஒரு முஸ்லிமாக இருந்த போதிலும் ஆளுநர் பதவிக்கு உரிய கௌரவத்தைபாதுகாத்துக் கொண்டு சகல மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற தான்எதிர்பார்த்துள்ளேன்.

அரச அதிகாரிகளாக இருப்பினும் மிகவும் சுமூகமாக பழகக்கூடிய நல் எண்ணம் கொண்டு செயற்படுவேன்.

கிழக்கில் தொண்டராசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை சுகாதார ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அனைத்தையும் உணர்ந்து இதற்கான நிரந்தர தீர்வொன்றை முன்வைத்து புதிய செயலணிகளை உருவாக்கி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

அரச அதிகாரிகளின் ஆதரவும் மக்களின் ஆதரவும் தேவை. அரச பணத்தில் தங்களுக்கான சம்பளம் பெற்றுத் தரப்படுகிறது. எனக்கும் இவ்வாறே கிடைக்கப்பெறுகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல கிழக்கில் இன முரண்பாடுகளற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் எனக்கு ஆளுநர் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். இஸ்மாயில், கிழக்கு மாகாணபிரதம செயலாளர் டி. எம். எஸ். அபேகுணவர்தன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின்செயலாளர்கள், முற்படை அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ.புஷ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

36Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*