மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எச்சரித்துள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்னோக்கி நகரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பட்டுள்ள பாரிய இழப்பினை மக்களே செலுத்தவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி ஐக்கியதேசிய கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஐக்கியதேசிய கட்சி தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் சுயாதீன நீதித்துறை நீதியான தீர்ப்பை வழங்கும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டவுடன் நீதித்துறையின் சுதந்திரம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன கடந்த மூன்று வருடங்களில் ஐக்கியதேசிய கட்சியோ அல்லது அதன் தலைவரோ நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

13Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*