தீர்த்தக் குளத்தில் மாட்டின் எலும்புகள்! கொதிப்பில் அம்பாரை இந்துக்கள்!!

அம்பாரை கல்முனை – வரலாற்று பிரசித்தி பெற்ற தரவை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலயத்தையும் அதனை அண்டிய இந்துகள் வாழும் கல்முனை நகரில் கழிவுகளால் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

ஆலயத்தை அண்டிய பகுதிகள் மாட்டு எலும்புகளையும், கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டும் இடமாக கரவாகு கண்ட விவசாய பாதையை அண்டிய தரவை பிள்ளையார் ஆலய தீர்த்த குளக்கரை காணப்படுகிறது.

இது குறித்து பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்..

ஆலயத்திற்கு வரும்போது அசிங்கமான துர்நாற்றம் வீசுகின்றது மனதை ஒருநிலைபடுத்தி வளிபாடு செய்யமுடியவில்லை. தினமும் தூர்நாற்றத்தை போக்க சாம்பிராணி இட்டால்தான் ஆலயத்தினுள் இருக்கவேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

மாநகரசபை உறுப்பினர் பொன். செல்வநாயகம் கூறுகையில்… கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயம் சிதைக்கப்படுவதும் அழிக்கப்டுவதும் அடிப்படைவாதிகளின் நோக்கம் இந்து ஆலயம் இருப்பது வளர்ச்சிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் தடையாக இருக்கிறது இதன்காரணமாகத்தான் இவ்வாறான விசமச்செயல்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டுவருகின்றனர். மிருக கழிவுகளையும் அழுக்குகளையும் அப்பிரதேசத்தில் கொட்டி விடுவதனூடாக எங்களை நலினப்படுத்தும் செயல் மாத்திரமல்ல எங்களுடைய கௌரவத்தை குறைக்கும் செயலாகவும் பார்கின்றோம் என்றார்.

500 வருடங்கள் பழமையான தரவை சித்திவிநாயகர் ஆலயம் .அதற்கு பட்டயமாக வழங்கப்பட்ட நெற்காணிகள் தற்போது அபகரிக்கப்பட்டு ஆலயத்தினை அகற்றும் நடவடிக்கைகளாக கடந்த கால சிலை உடைப்புக்கள் பார்க்கப்படுகின்றன.

1967 ம் ஆண்டு அடிப்படை வாதிகளாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் அச்சுறுத்தல் அரசியல் பலம் காரணமாகவும் தமிழர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கல்முனை தமிழர் நிலப்பரப்புகள் சுருங்கிக்கொண்டு செல்கிறது.

ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் மாட்டின் எலும்புகளால் நிறைந்துள்ளது. இவ்வாறு எச்சங்களை கொட்டுபவர்களுக்கெதிராக மாநகர சபை மேயர் அவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

32Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*