ஐக்கிய தேசிய கட்சியே எமது பொது எதிரி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உருவாக்கப்படுகின்ற கூட்டணியூடாக முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

Loading...

நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ஐக்கிய தேசிய கட்சியே தமது பொது எதிரி என்று கூறினார்.

அதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சவாலாக அமையாது என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

7Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*